இத்தாலி ஓபன் முதல் சுற்றில் கொப்பின் வெற்றி

0
536
Italian Open 2018 David Goffin news Tamil

(Italian Open 2018 David Goffin news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப்போட்டியில் பெல்ஜியத்தின் டேவிட் கொப்பின் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.

இந்த போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கொப்பின், ஆர்ஜன்டீனாவின் லியானார்டோ மேயரை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய கொப்பின், 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய கொப்பின், இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>