பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்

0
951
Uuragas Junction policeman firearm one killed

(Uuragas Junction policeman firearm one killed )காலி, அம்பலாங்கொட ஊருகஸ்மங்சந்தி கலுவல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சுயமாக இயங்கியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

காலி, அம்பலாங்கொட ஊருகஸ்மங்சந்தி கலுவல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் தொடர்பில் நேற்று இரவு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது நூற்றுக்கு அதிகமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் அந்த இடத்தில் இருந்த நபர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கி சுயமாக இயங்கியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, அவர் ருவான்புர – கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது 5 பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags:Uuragas Junction policeman firearm one killed ,Uuragas Junction policeman firearm one killed