சனீஸ்வரனுக்கு எள் கொண்டு விளக்கேற்றுவது ஏன் ??

0
601
Lord saneeshwaran worship today horoscope
Ntamil News

(Lord saneeshwaran worship today horoscope)

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று, உண்மைதான். எற்கனவே சொன்னது போல, நாம எப்படி வாழ்வதற்கு தக்கபடியான பலாபலன்களையே வழங்குகிறார் .

அதனால்தான், சனிக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று நவகிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

சனீஸ்வரருக்கு உகந்தது எள். எனவே எள் சாதம் நைவேத்தியம் செய்யலாம். எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொண்டு தீபமேற்றலாம். ஆனால் ஒருபோதும் எள் தீபம் ஏற்றுவது கூடாது என்றும், கூறுகிறார்கள். அதேசமயம் எள்ளில் இருந்து எண்ணெய் வருகிறது. அந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதும், எள்ளையே கொண்டு விளக்கேற்றுவதும் தவறொன்றுமில்லை என்றும் சில ஆச்சார்யப் பெருமக்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தானியங்களை எரிப்பது என்பதே தவறு. யாகங்களில், ஹோமங்களில் தானியங்களை முழுமையாகத் தீயில் சமர்ப்பிப்பது என்பது வேறு. அது அந்தந்த தேவதைகளுக்கு உரிய ஆகுதியாகச் சென்று சேர்ந்து விடுகிறது.

ஆனால், சனீஸ்வரனுக்கு உரிய சமித்தான எள்ளைக் கொண்டு விளக்கு ஏற்றுவது என்பது தவறான செயல். எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெயைக் கொண்டுதான் விளக்கேற்ற வேண்டும். அதுவே சாஸ்திரங்கள் சொல்லும் உண்மையும் அதுவேயாகும்.

ஆதிகாலத்தில் பனையெண்ணெய், ஆமணக்கெண்ணெய், எள் எண்ணெய்தான் ஆலயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என வரலாறு கூறுகிறது. வசதியானவர்களால் மட்டுமே பசு நெய் கொண்டு விளக்கு ஏற்றப்பட்டு வந்துள்ளது. இன்று விளக்கேற்றும் எண்ணெய் என வகை வகையாக பல எண்ணெய்கள் வந்துள்ளன. என்றாலும், எள் எண்ணெய் கொண்டு போடப்படும் தீபமே உத்தமமானது.

Source by :tamil.webdunia.com

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Lord saneeshwaran worship today horoscope