மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்

0
1489
Human bones Recovery

(Human bones Recovery)
மீகொடை தாம்பே பகுதியில் கற்குழிக்குள் இருந்து மனித தலைப்பகுதி, கை மற்றும் கால் எழும்புகள் என்பன நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மயில் அகவும் சத்தம் கேட்டு, மயிலை பார்ப்பதற்கு சென்ற வேளை, கற்குழிக்குள் மனித எழும்புகள் இருப்பதனைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவர்கள் இந்தச் சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த மனித எச்சங்களை மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தினை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வயோதிபர் ஒருவர் காணாமல் போயிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மனித எச்சங்கள் காணாமல் போனவரின் எச்சங்களா அல்லது வேறொருவரின் எழும்புகளா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Human bones Recovery