சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தினரிடம் செல்லவுள்ள மகிந்த அணி

0
443
oppression leader again international parliament joint mahindha group

oppression leader again international parliament joint mahindha group
எதிர்கட்சி தலைவர் தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடமே குறித்த முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

எனினும் 16 பேர் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரியதாகும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
oppression leader again international parliament joint mahindha group

More Tamil News

Tamil News Group websites :