காஷ்மீர் பெண்களுக்காக புதிய பயணத்தை ஆரம்பிக்கும் ஐரோம் சர்மிளா

0
529
Irom Sharmila currently working rights rights women Kashmir

Irom Sharmila currently working rights rights women Kashmir

இந்திய மணிப்பூர் மாநிலத்தில் இரும்புப் பெண்மணியான ஐரோம் சர்மிளா தற்போது காஷ்மீர் பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்காக பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமுலிலிருக்கும் இராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை உண்ணாவிரதம் இருந்துவந்தார்.

இன்று புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோம் ஷர்மிளா, காஷ்மீர் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தான் இராணுவத்துக்கு எதிரானவர் இல்லை.  இந்த அரசியல் அமைப்புக்கு மட்டுமே எதிரானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் பெண்கள் படும் துன்பம் குறித்து மத்திய மாநில அரசுகளுடன் பேசுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எந்த அரசுடனும் பேசப்போவது இல்லை. ஆனால் மக்களிடம் நான் பேசுவேன். அவர்கள் அரசை பேச வைப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

Irom Sharmila currently working rights rights women Kashmir

More Tamil News

Tamil News Group websites :