எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுக்கிறது- தமிமுன் அன்சாரி

0
462
BJP Humane Peoples Democratic Party leader continuing crisis

BJP Humane Peoples Democratic Party leader continuing crisis

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பா.ஜ.க. கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடந்த 9ஆம் திகதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

நான் முதல்வரிரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை. தினகரன் பக்கமும் இல்லை. இரு கட்சியிலும் இருந்து சமதூரத்தில் விலகி இருக்கிறேன். இருவரின் அரசியல் மீது விமர்சனம் உண்டு. என் கட்சி வழி காட்டுதல்படி நான் தனித்தே செயல்படுகிறேன்.

காவிரி பிரச்சினை, நீட்தேர்வு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் தனித்து போராடுகிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது எங்களுக்கு விமர்சனம் இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு பார்க்க வேண்டும் என்றால் உடனே நேரம் ஒதுக்கி தருகிறார். ஆனாலும் அவரது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்கு விமர்சனம் உண்டு.

இதைபோல் தினகரன் மீது மரியாதை இருந்தாலும் பிரதமருக்கு எதிராக கறுப்புகொடி போராட்டம் வேண்டாம் என்று அறிவித்தது அரசியலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.விலிருந்து தினகரன் பிரிந்த சமயத்தில் தனியரசு, கருணாஸ் நான் ஆகிய 3 பேரும் சமரசம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. அதனால் நாங்கள் விலகி நிற்கிறோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு பா.ஜ.க. கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்றினால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது.

எடப்பாடி ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியின் குரல்வளையை நெரிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் இருக்காது. அதன்பிறகு நிலைமை மாறலாம்.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

BJP Humane Peoples Democratic Party leader continuing crisis

More Tamil News

Tamil News Group websites :