நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேருவோம் – திருமாவளவன்

0
819
DMK parliamentary elections without conditions join coalition

DMK parliamentary elections without conditions join coalition

எந்த ஒரு நிபந்தனையுமின்றி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேருவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியென்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த செவ்வியில் கூறியுள்ளதாவது,

கேள: நீங்கள் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்தற்கான காரணம் என்ன?

பதில்: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரை வாழ்த்து தெரிவிக்க விரும்பினோம். அதற்காக அவரை சந்தித்தேன்.

மேலும் எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது அதற்கு எதிர் கருத்துக்களை காங்கிரஸ் வெளியிட்டதுடன, அந்த கட்சி சார்பில் 500 மாவட்டங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன். அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவரிடம் வற்புறுத்தினேன்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை விடுதலை சிறுத்தை கட்சி வழங்குகிறது.

மேலும்இ சித்தாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவரை சந்தித்தேன். எஸ்.சி., எஸ்.டி. சட்டம் பிரச்சினை தொடர்பாக அவரும் இதற்காக குரல் கொடுத்தார்.

கே: ஆனால் இந்த சந்திப்பு தி.மு.க. வினருக்கு வியப்பை அளித்திருப்பதாக தெரிகிறதே?

ப: சென்னை மற்றும் டெல்லியில் அடுத்தடுத்து நடந்த அரசியல் நிகழ்வுகளால் இதுபோன்ற கருத்துக்கள் இருக்கலாம். மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு நிகழ்வு நடந்த உடனேயே நான் டெல்லி சென்றிருந்தேன். இருந்தாலும் நாங்கள் அரசியல் பேசவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருக்க வேண்டும். மேலும், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளும் இருக்க வேண்டும் என்பது பற்றி கூறினேன். இந்த கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.

கே: இந்த சந்திப்பு பற்றி ஏன் முன்கூட்டியே தி.மு.க. தலைமையிடம் சொல்லவில்லை?

ப: இது ஒரு மரியாதைக்குரிய நட்பு முறையிலான சந்திப்பு ஆகும். தி.மு.க. தலைமையிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கே: உங்களுக்கு தி.மு.க. வுடன் உறவு தற்போது எப்படி உள்ளது?

ப: நாங்கள் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் அங்கம் வகிப்போம். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிந்ததுமே நாங்கள் மாநாடு நடத்தி மதசார்பற்ற இயக்கங்களை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

நாங்கள் தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை விமர்சித்து இருக்கிறோம். அது சட்டமன்ற தேர்தலைமையமாக வைத்து நடந்தது. தற்போது நாம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். இப்போது மதசார்பின்மைக்கும் ஜாதி மத ரீதியான அமைப்புகளுக்கும் இடையே போட்டி நடக்கிறது.

கே: நீங்கள் தி.மு.க.வை விட காங்கிரசுடன் அதிக நெருக்கம் காட்டுவது போலத் தான் தோன்றுகிறதே?

ப: காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் நெருக்கமாக இருக்கிறது. காங்கிரசை விட்டு அவர்கள் விலகி செல்ல விரும்பவில்லை.

கே: இப்போது அமைக்கப்படும் புதிய கூட்டணியில் நீங்கள் உறுதியாக இருப்பீர்களா?

ப: இது ஒரு பிரச்சினை இல்லை. கடந்த 17 ஆண்டுகளில் நாங்கள் அ.தி.மு.க.வுடன் 6 மாதம் மட்டுமே கூட்டணியில் இருந்தோம். மற்ற காலங்களில் எல்லாம் தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் இருந்தோம். 2019 தேர்தலின்போது தேசிய அளவிலான விவகாரம் சம்பந்தப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்.

கே: சந்திரசேகர் ராவ், மம்தாபானர்ஜி ஆகியோர் தி.மு.க. தலைமையுடன் பேசுவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

ப: அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது அமைய உள்ள நல்ல சூழ்நிலையை அது தாமதப்படுத்தி விடும். அவர்கள் எடுக்கும் முயற்சி என்பது தற்கொலைக்கு சமமானது. அதன்மூலம் சில இடங்களை வேண்டுமானால் அவர்கள் பிடிக்கலாம். ஆனால் பாரதிய ஜனதாவை தோற்கடிக முடியாது. பாரதிய ஜனதாவுக்கு அது சாதகமாக அமைந்து விடும். எனவே மிகவும் கவனமாக இந்த விஷயத்தை கையாள வேண்டியது உள்ளது.

தேசிய அளவில் அனைத்து சிறு கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜிஇ நிதிஷ்குமார், முலாயம்சிங் யாதவ், மாயவதி, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை இணைந்து ஒரு அணியாக வரவேண்டும்.

காங்கிரசை உள்ளிடக்கி இந்த அணி அமைய வேண்டும். அப்போது தான் மதசார்பு சக்திகளை தோற்கடிக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

DMK parliamentary elections without conditions join coalition

more Time Tamil News Today

Time Tamil News Group websites :