இரண்டாம் உலகப்போரின் நினைவு நாள் கொண்டாட்டங்கள்!

0
587
World War II Memorial Day Celebrations

இரண்டாம் உலகப்போரின் நினைவு நாள் நேற்று (மே8) சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்டது.World War II Memorial Day Celebrations

வருடா வருடம் இரண்டாம் உலகப்போரின் வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இங்கு கொண்டாடப்படுகிறது. மே 8, 1945 ஆம் வருடம் ஜெர்மனியின் நாசி துருப்புக்கள் சரணடைந்த நாளை இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

சோம்ப்ஸ்-எலிசேக்கு இந் நிகழ்விற்காக வருகை தந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப் மற்றும் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப்போரின் ஒப்பற்ற வீரரும், படைத்தளபதியும், பின்நாளில் பிரான்ஸின் ஜனாதிபதியுமாகிய சாள்-து-கோல் அவர்களின் சிலைக்கு முன்னால் மூவர்ணத்தினாலான மலர்மாலை வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், Arc de Triomphe சென்ற மக்ரோன், ‘பெயர் தெரியா மாவீரன்’ (Tombe du soldat inconnu) நினைவிடத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**