Categories: FranceWORLD

அப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு!

அப்பிள் காட்சியறைகளுக்கான பள்ளி பயணங்கள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளன. வணிக ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏற்பட்ட சர்ச்சையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. France government ban visit apple showrooms

கல்வி மந்திரி பால் வன்னியரின் கீழ், அமைச்சகம் மாபெரும் தொழில்நுட்ப காட்சியறைகளுக்கான, அனைத்து எதிர்கால பயணங்களையும் தடை செய்துள்ளதாக வார செய்தி அறிக்கையில் அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனம், பிரான்ஸின் அனைத்து அமெரிக்காவிற்கான பள்ளிப் பயணங்களையும் வரவேற்கிறது.

இதற்காக ஆசிரியர்கள் ஒன்லைனில் கையெழுத்திடலாம். அவர்களது (நாட்டில் உள்ள 20 இடங்களில்) அருகில் உள்ள கடைகளில் ஒன்லைன் இல் எத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து, வகுப்பறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை தெரிவு செய்து பூரணப்படுத்த வேண்டும்.

குறியீட்டு மற்றும் தொழில்நுட்ப திறன்கள் கொண்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கும், குழந்தைகளின் கணினி திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க அதிகாரப்பூர்வ யோசனை இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அறிக்கைகள் கூட அறிவிக்கப்பட்டுள்ளன

மேலும், இது தொடர்பாக “கற்பனை மற்றும் குழு திறன்களை” வளர்த்துக் கொள்ள உதவுவதுடன், நடைமுறை பயிற்சிகளினால் அப்பிள் தயாரிப்புகள் மூலம் கற்பனைகளை செயலாக்க முடியும்” என பிரெஞ்சு மொழி அப்பிள் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிள்ளைகள் அப்பிள் காட்சியறைகளில் சாதாரண வாடிக்கையாளர்கள் போல் நடத்தப்படுவதுடன், அவர்களின் அப்பிள் காட்சியறை விஜயத்தின் பின்னர் அவர்களுக்கு அப்பிள் ரீ-சேர்ட் மற்றும் USBகள் வழங்கப்படும்.

“இது எங்களுக்கு பெரிய விளம்பரம். வகுப்பறைகளில் பயன்பாட்டிற்கான ஐபாட்களின் சில விற்பனையைத் தூண்டினால், ஏன் முடியாது? இது எங்களது தயாரிப்புகளுக்கான ஒரு பெரிய திரை” என பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்

பெற்றோர் மற்றும் பிள்ளைகள், தங்கள் வருகையின் புகைப்படங்கள் அல்லது அங்கு எடுத்த படங்களை தங்களின் அடுத்த விளம்பரங்களில் பயன்படுத்த அனுமதிப்பதாக கையெழுத்திட்டு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இது தவறாக ஒரு பள்ளி பயணத்தை வணிக முயற்சியாக மாற்றி விட்டதாக அவர் மேலும் விமர்சித்தார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: ban visit apple showroomsFrance governmentFrance government ban visit apple showroomsFrance government ban visit to apple showroomsfrance tamil news

Recent Posts

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

10 mins ago

“பிக் பாஸ் பைனல் ரேங்க் ” நான் தான் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் : ஜனனியுடன் சண்டைக்கு நிற்கும் யாஷிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .(Tamil Big Boss Final Rank Episode Promo)…

11 mins ago

அனுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.…

12 mins ago

இந்திய-பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவுள்ளார் பாக். பிரதமர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்த போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் பார்க்க செல்ல…

49 mins ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

59 mins ago

நிம்மதியாக வாழ விரும்பினால் ஐ.தே.க வை ஆதரிக்க வேண்டும்! மிரட்டுகிறாரா விஜயகலா!

"கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறுமையானவர்கள் இருக்கும்போது தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டது. இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு மட்டுமே உங்களுக்கு…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.