கெபாப் கடைக்கு தவறுதலாக 7600 ஃப்ராங்குகள் டிப்ஸ் கொடுத்த பெண்!!

0
506
7600 franc tip Swiss kebab shop, 7600 franc tip Swiss kebab, 7600 franc tip Swiss, 7600 franc tip, franc tip Swiss kebab shop, Tamil Swiss News, Swiss Tamil news

(7,600 franc tip Swiss kebab shop)

சுவிட்சர்லாந்து வாழ்க்கைச் செலவு உயர்ந்த நாடு தான், இருப்பினும் ஒரு கேக்குக்கும் காப்பிக்கும் 7,686 ஃப்ராங்குகள் டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு விலை உயர்ந்த நாடு அல்ல.

அண்மையில், சூரிச்சில் இருக்கும் கெபாப் கடை ஒன்றிற்கு சென்றிருந்த Olesya Shemyakova கொடுத்த விலையே இது!!

23.70 ஃப்ராங்குகள் தான் இந்த பெண் உண்ட பொருட்களுக்கான விலை. எனினும் அவர் தனது ரகசிய எண்ணை 7686 என டைப் செய்த உடனேயே, பில் பெறுமதியையும் டைப் செய்ததால், அவர் 7600 என தவறுதலாக டைப் செய்து விட்டார்.

ஆயினும் 37 வயதான Olesya Shemyakova அதனை உடனே அறிந்திருக்கவில்லை, மாறாக மாத இறுதியில் அவரது க்ரெடிட் கார்ட் பில் வந்த போது தான் தன் தவறை உணர்ந்தார்.

அதன் பின் அவர் க்ரெடிட் கார்ட் நிறுவனத்தையும், பொலிசாரையும் தொடர்பு கொண்ட போது, இது ஒரு குற்றச் செயல் அல்ல எனக் கூறிஅவர்கள் உதவ மறுத்து விட்டனர்.

ஆயினும் அதிர்ஷ்டவசமாக அவர் கடை உரிமையாளரை தொடர்பு கொண்ட போது, அப்பணத்தை வழங்குவதாக உறுதி செய்தார்.

 

7600 franc tip Swiss kebab shop, 7600 franc tip Swiss kebab, 7600 franc tip Swiss, 7600 franc tip, franc tip Swiss kebab shop, Tamil Swiss News, Swiss Tamil news

அகதி குடும்பத்திற்காக போராடும் சுவிஸ் கிராமம்

Tamil News Groups Websites