பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!

0
736
Many things are hidden in the matter of Nirmala Devi

(Many things are hidden in the matter of Nirmala Devi)

 

நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது என்று முன்னாள் சென்னை மேல்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் பேசினார்.

தமிழகத்தையே அதிர்ச்சியுற வைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

உண்மை கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறிய மதுரை காமராசர் பல்கலைக்கழக அலுவலர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதும் பல்கலைக்கழக ஆசிரியர் அலுவலர் யாரும் இதைப்பற்றிப் பேசக்கூடாது என்று துணைவேந்தரும் பதிவாளரும் கூறியிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு, 4ஆம் திகதி மதுரையில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், “உயர்நீதிமன்ற நீதிபதியின் செயல்பாட்டையே, சக நீதிபதிகள் வெளியில் வந்து ஊடகத்திடம் பேசுகிறார்கள்.

அப்படியிருக்கும் போது காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசக் கூடாது என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் தரமான இல்லை. அப்படி இருந்திருந்தால் மாணவிகளுக்கு எதிரான புகார்கள் வராது. ஆசிரியர் சங்கங்கள் பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

(Many things are hidden in the matter of Nirmala Devi)

 

Tamil News Group websites :