பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: 14 பேர் கைது

0
399
14 people arrested connection rape murder minor

(14 people arrested connection rape murder minor)

 

சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஜார்க்கண்ட் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்டில் மாநிலம்சாத்ரா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியொருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தோப்பு காரணம் போடவும்இ 50 ஆயிரம் இந்திய ரூபா அபராதம் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை தாக்கியதுடன், சிறுமியை தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக 14 பேரை அம்மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(14 people arrested connection rape murder minor)

 

Tamil News Group websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here