ஜெயலலிதாவுக்கு நினைவிடம் -எதிர்வரும் 7இல் அடிக்கல் நாட்டு விழா

0
400
May 7 to set memorial Chennai Marina

(May 7 to set memorial Chennai Marina)

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்வரும் 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்வரும் 7ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான பழனிச்சாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மெரினாவில் காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(May 7 to set memorial Chennai Marina)

 

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here