பிரீமியர் லீக் : மென்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தியது பிரைட்டன்!

0
469
brighton hove albion vs manchester united news Tamil

(brighton hove albion vs manchester united news Tamil)

பீரீமியர் லீக் பட்டியலில் 14வது இடத்திலிருந்த பிரைட்டன் அணி, பட்டியலின் இரண்டாவது இடத்திலிருந்த மென்செஸ்டர் யுனைடட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

இரு அணிகளும் தங்களது 36வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
பிரைட்டன் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கும் வாய்ப்புகளை நழுவவிட்டன. எனினும் பின்னர் ஆரம்பமான இரண்டாவது பாதியில் பிரைட்டன் அணி ஆதிக்கத்தை செலுத்தியது.

போட்டியின் 57வது நிமிடத்தில் பிரைட்டன் அணியின் கிரோப் கோலடிக்க, மிகுதி நேரங்களில் இரண்டு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் போட்டியில் பிரைட்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 14வது இடத்திலிருந்த பிரைட்டன் அணி 40 புள்ளிகளை பெற்று 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here