தேர்தல் ஆணையம் மீது தியான் சுவா தொடர்ந்த வழக்கு தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

0
681
Tian Chu case Election Commission, tian, election commision, malaysia tamil news, malasysia,

{ Tian Chu case Election Commission }

மலேசியாவில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பி.கே.ஆர். சார்பில் போட்டியிடவிருந்த தியான் சுவாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து அந்த ஆணையத்திற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தியான் சுவா கடந்த திங்கட்கிழமை வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், தேர்தல் அதிகாரி அன்வார் முஹம்மட் ஜைன், தேர்தல் ஆணையம் ஆகியவற்றை பிரதிவாதியாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி நோர்டின் ஹாசான் தீர்ப்பை நாளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

முந்தைய வழக்கு ஒன்றில் தியான் சுவாவிற்கு நீதிமன்றம் 2,000 வெள்ளி அபராதத்தை விதித்ததால் அவரது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழப்பதாக கூறி தேர்தல் அதிகாரி அன்வார் முஹம்மட் அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்.

கூட்டரசு அரசியலைமைப்பு சட்டத்தின் விவகாரம் 48 (1)(இ)யின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி தனக்கு இருப்பதாக அறிவிக்கக்கோரி தியான் சுவா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாம் போட்டியிடுவதற்கான உரிமையிருப்பதாகவும் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியுமென்றும் அறிவிக்கக்கோரி அம்மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 13ஆவது பொதுத்தேர்தலின் போது தமக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட போதும் அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்படவில்லை.

மேலும், அந்த தீர்ப்பு நாடாளுமன்ற உறுப்பினராக தாம் இருப்பதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என அவ்வழக்கில் சேர்க்கப்பட்ட சத்திய பிரமாண மனுவில் தியான் சுவா குறிப்பிட்டுள்ளார்.

Tags: Tian Chu case Election Commission

<<MOST RELATED CINEMA NEWS>>

*மீண்டுமொரு சிறிய விமான நிலையம் கட்ட தயார்..!

*சோதனை நடவடிக்கை மேட்கொள்ள சென்ற போலீஸ்காரர்கள் செய்த வேலை..!

*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

<<Tamil News Groups Websites>>