Categories: FranceWORLD

சீனாவை எதிர்க்கும் பிரான்ஸ்!

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.France opposes China’s dominance indo pacific region

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்துவதாக கூறுகிறது. இதற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசு முறை விஜயமாக அவுஸ்திரேலியா சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் துறை மற்றும் சூரிய மின்சக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அதன் பின்னர், இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியதாவது,

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் விதிமுறைகளை கடைப்பிடித்து வளரும் நாடுகளை காப்பது முக்கியம். அப்பகுதியில் அமைதிக்கான சமநிலையும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு ஆதிக்கத்தையும் வளர விடக் கூடாது என்பதும் முக்கியம் என்றார் அவர். அதாவது மறைமுகமாக சீனா ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பேசுகையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை வரவேற்பதாகக் கூறினார். அதேவேளையில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து தரப்புகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார் அவர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: China's dominanceChina's dominance indo pacific regionFrance opposes China's dominance indo pacific regionFrance presidentfrance tamil newsindo pacific region

Recent Posts

டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building…

17 mins ago

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய Promo வீடியோவில் மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் காட்சியை காணக்கூடியதாக…

20 mins ago

எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!

{ SSI daughter killed crash Complaint stunt director } சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதிய விபத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின்…

29 mins ago

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் முக்கிய அறிவித்தல்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சிகளை, சகல அரசாங்கப் பாடசாலைகளிலும், இவ்வாண்டுக்குரிய தொனிப் பொருளில் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சு…

37 mins ago

லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்

பிரித்தானிய இளவரசர் ஹரியை கடந்த மே மாதம் திருமணம் செய்த நாள் முதல் மேகன் மார்க்கல் தனியாக எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. அந்தவகையில், லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…

49 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.