அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு : பதறியடித்து ஓடிய நபர்கள்

0
543
lindula mattukelle fire

(lindula mattukelle fire)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மட்டுக்கலை தோட்டத்திலுள்ள 10 ஆம் இலக்க நெடுங்குடியிருப்பிலுள்ள முதலாவது வீட்டிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்த போது வீடு திடீரென் தீப்பற்றி எரிந்துள்ளது.
அதிர்ச்சிக்குள்ளான நபர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.

எனினும் குறித்த நெடுங்குடியிருப்பின் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாது பிரதேச மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மனித பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:lindula mattukelle fire, lindula mattukelle fire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here