6 மாத குழந்தைக்கும் கொடுக்கக்கூடிய மட்டன் பிரியாணி

0
721
Kids Favorite Mutton Biryani Recipe, Favorite Mutton Biryani Recipe, Mutton Biryani Recipe, Biryani Recipe, Favorite Biryani Recipe

(Kids Favorite Mutton Biryani Recipe)

தேவையான பொருட்கள் :
* அரிசி – கால் கப்
* எலும்பில்லாத மட்டன் – 4 துண்டுகள்
* தயிர் – கால் தேக்கரண்டி
* கரம் மசாலா – ஒரு சிட்டிகை
* மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
* எண்ணெய் – கால் தேக்கரண்டி

அரைக்க :
* சின்ன வெங்காயம் – 2
* பச்சை மிளகாய் – பாதி (விதை நீக்கியது)
* இஞ்சி – கால் அங்குலத் துண்டு
* பூண்டு – ஒன்று
* புதினா இலைகள் – 5
* மல்லி இலை – 3 தண்டிலுள்ள இலைகள்

செய்முறை :
* மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் அரைக்க கொடுத்தவற்றை போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.

* அதனுடன் கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

* பின்னர் தயிர் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடியிட்டு மட்டனை வேக வைக்கவும்.

* மட்டன் வெந்ததும் திறந்து கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்த்து குக்கர் வெயிட் போட்டு மேலும் 15 நிமிடங்கள் வேக விடவும்.

* குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியை திறந்து ஒரு கரண்டி அல்லது மத்தினால் சாதம் மற்றும் மட்டனை மசிக்கவும்.

* பிரியாணி ரெடி. நெய் கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Kids Favorite Mutton Biryani Recipe