சிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜெர்மனி வாசிகள்…!

7
1114
Skin Alergic Eczema Attack Germany People, Skin Alergic Eczema Attack Germany, Skin Alergic Eczema Attack, Skin Alergic Eczema, Skin Alergic

(Skin Alergic Eczema Attack Germany People)

ஜெர்மனி முழுவதும் தோலில் துளையிட்டு ஆழமாகச் சென்று அரிப்பை ஏற்படுத்தும் சிறு பூச்சிகளால் ஏற்படும் Scabies எனப்படும் சிரங்கு தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜெர்மன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer, சிரங்குக்காக மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 38,000 ஆக இருந்தது 2017 ஆம் ஆண்டில் 61,000 ஆக உயர்ந்துள்ளது என்று சமீபத்தில் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக சிரங்குக்காக மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச்சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Itch Mite எனப்படும் சிறு பூச்சிகளால் உருவாகும் இந்த நோய் மனிதர்களை மட்டுமே தாக்கக்கூடியது.

உடலில் துளையிட்டு உள்ளே சென்று முட்டையிடும் இந்த பூச்சிகள் பெரும்பாலும் விரல்களுக்கிடையேயும் அக்குளிலும் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன.

இதனால் தாங்க இயலாத அளவிற்கு முக்கியமாக இரவு நேரங்களில் ஊரலும், தோல் சிவந்து போதலும், கொப்புளங்களும் தோலில் செதில்களும் உருவாகும்.

ஒருவரையொருவர் தொடுவதன் மூலம் பரவும் இந்த நோய் அந்த நோயை உண்டாக்கும் பூச்சியைக் கொல்லும் திறன் கொண்ட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட மருந்தின் மூலமாக மட்டுமே குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பலர் சேர்ந்து இருக்கும் இடங்களில் ஏற்படும் தொற்று மட்டுமே பதிவு செய்யப்படுவதால் ஜேர்மனியில் எத்தனை பேருக்கு இந்த நோய் இருக்கிறது என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

 

web title : Skin Alergic Eczema Attack Germany People

Tamil News