Categories: Breaking NewsHot NewsNEWSTop Story

புதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ

(Cabinet reshuffle today)
உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தேசிய அரசாங்கத்தில் சர்ச்சைக்குரிய நபர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்ற விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மாத்திரமே அமைச்சு பதவி வழங்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாதுறை அமைச்சு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், இரு பிரதான கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சர்கள் விபரம் இதோ,

    1. தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
    2. சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே நியமனம்
    3. நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
    4. திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமனம்
    5. அரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன் நியமனம்
    6. மீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகாரா அமைச்சராக டீ.எம்.சிவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
    7. மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா நியமனம்
    8. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமனம்
    9. பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரான ரஞ்ஜித் மந்துமபண்டார நியமனம்
    10. பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் நியமனம்
    11. நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரல நியமனம்
    12. சமூக வலுவூட்டல் அமைச்சராக பீ. ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்
    13. எஸ்.பி. நாவின்ன உள்நாட்டலுவல்கள மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    14. நீர்ப்பாசன மற்றும் நீரியல்வள முகாமைத்துவம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமனம்
    15. விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமனம் பெற்றுள்ளார்.
    16. விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி , திறன்விருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
    17. பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
    18. உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்

இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

 

மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!

சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார

More Tamil News

Time Tamil News Group websites :

Tags: Cabinet reshuffle today, Cabinet reshuffle today

Santhosh M

Share
Published by
Santhosh M

Recent Posts

சவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்

சவுதியில் பெண்களை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களாக பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. first woman read news Saudi television வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு…

14 mins ago

அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’

3 வருடங்கள் பழுதடையாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க இராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். American Army’s culinary experts pizza refreshed 3 years …

1 hour ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

3 hours ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

3 hours ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

3 hours ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.