வருடாந்த ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தல் வெளியானது!!! : இந்தியா மற்றும் இலங்கை பிடித்துள்ள இடங்கள்!!!

0
645
Annual ICC Test Ranking released 2018

(Annual ICC Test Ranking released 2018)

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் டெஸ்ட் தரப்படுத்தலின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வருடாந்தம் அறிவிக்கப்படும் இந்த டெஸ்ட் தரப்படுத்தலில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய அணி 4 புள்ளிகள் அதிகம் பெற்று 125 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனையடுத்து தென்னாபிரிக்க அணி 13 புள்ளிகள் பின்தங்கி 112 புள்ளிகளும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. எனினும் இம்முறை தென்னாபிரிக்க அணி வருடாந்த புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளை இழந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 4 புள்ளிகள் அதிகரிப்புடன் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தையும், புள்ளிகளில் எவ்வித மாற்றமும் இன்றி 102 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்ந்து ஒரு புள்ளி அதிகரிப்புடன் இங்கிலாந்து அணி 98 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி ஒரு புள்ளி குறைந்து, 94 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.

86 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 7வது இடத்தை பாகிஸ்தான் அணி பிடித்துள்ளதுடன், முதலாவது தடவைாயக பங்களாதேஷ் அணி நான்கு புள்ளிகள் அதிகரிப்புடன் 75 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த பட்டியலின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களை மே.தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் பிடித்துள்ளன.

<<Tamil News Group websites>>

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here