பேச மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் (Video)

7
2001
youth cut head girl chidambaram annamalai university

(youth cut head girl chidambaram annamalai university)

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் பலர் முன்னிலையில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த காதலனால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்துவருபவர் லாவண்யா, இவரும் அதே பல்கலை கழகத்தில் படித்து வருபவருமான நவீன் என்பவரும் காதலித்துவந்ததாக தெரிகிறது.

இன்றுகாலை அந்த பகுதி தபால் நிலையம் அருகே நின்று இருவரும் பேசிகொண்டு இருந்துள்ளனர், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, இதனால் ஆத்திரமடைந்த நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாவண்யாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் நவீனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் மாணவி லாவண்யாவை மீட்டு அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:youth cut head girl chidambaram annamalai university, youth cut head girl chidambaram annamalai university

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here