விசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்!

7
1417

(house fire hatton ruwanpura)
விசாக பூரணை பண்டிகை தினமான நேற்று, அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குறித்த குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தினால் குடியிருப்பு முற்றாக ஏரிந்துள்ளமையினால் உடைமைகள் அனைத்தும் தீயில் கருகியதாகவும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குடியிருப்பில் வாழ்ந்துவந்த 4 பேர் உறவினர்களின் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மின்சார கோளாறே தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:house fire hatton ruwanpura, house fire hatton ruwanpura

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here