விமானம் மூலம் முல்லைத்தீவு மீனவர்களை தேட நடவடிக்கை

missing fisherman requesting search navy flight help tamilnews

(missing fisherman requesting search navy flight help tamilnews)

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் சக மீனவர்களால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

12.03.18 அன்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் தொழில் நடவடிக்கைக்கு சென்றனர்.

சிலாபத்தினை சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவேல் மிரண்டா, 24 வயதான மிதுறதன் மிரண்டா ஆகிய ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை மற்றும் புதல்வர்கள் இருவரும் ஒரு படகில் தொழிலுக்காக சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்று கரை திரும்புவதாக தெரிவித்திருந்த போதும், இதுவரை கரை திரும்பாத நிலையில் மீனவர்களை தேடி நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் தேடுதல்களை மேற்கொண்டன.

காணாமல் போன மீனவரின் படகினை எந்த பகுதியில் தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் கரை திரும்பியுள்ளார்கள்.

தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்ற போதும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை

இந்த மீனவர்களின் படகு இயந்திரம் 40 குதிரைவலுக் கொண்டது என்றும் நேற்றைய தினம் பலமான கடல் கொந்தளிப்பு காரணமாக படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை எரிபொருள் நிரப்பும் குழாய் ஒன்று குறித்த பகுதிக்கு கரை ஒதுங்கியுள்ளதையும் நாயாற்று வாடியில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்தோடு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படைக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அக்கறையாக செயற்படவில்லை என்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று கடலுக்கு சென்று தேட முடியாத நிலை இருந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அரசு அக்கறை செலுத்தி கடற்படையினை கொண்டு மீனவர்களை தேடித்தர உதவுமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(missing fisherman requesting search navy flight help tamilnews)

More Tamil News Today

Our Other websites :