நோயாளர் காவுவாகனம் மோதி குடும்பஸ்தர் பலி – வாகனம் மீது பிரதேச மக்கள் தாக்குதல்

man killed last night patient Mullaithivu Cheemal area tamilnews

(man killed last night patient Mullaithivu Cheemal area tamilnews)

முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் நோயாளர் காவு வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு (13) பலியானார்.

இதனை தொடர்ந்து நோயாளர் காவு வாகனத்தின் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு – மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வாகனம் ஒன்று செம்மலை பகுதியில் உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஒன்று திரண்ட பிரதேச மக்கள் நோயாளர் காவு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

பின்னர் நோயாளர் காவு வாகனம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

சாரதி பொலிஸூக்கு சென்று சரணடைந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் செம்மலை பிரதேசத்தினை சேர்ந்த 53 வயதான கந்தையா புவனேந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

(man killed last night patient Mullaithivu Cheemal area tamilnews)

More Tamil News Today

Our Other websites :