மறந்துபோன மோசடியை மீண்டும் ஞாபகப்படுத்தும் மஹிந்த…!

What action against forgotten Mahendran mahinda

What action against forgotten Mahendran mahinda

மத்திய வங்கி மோசடியாளர்களை தற்­பொ­ழுது அனை­வ­ரும் மறந்துவிட்டதாக முன்­னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த மேசடியில் அர்ஜுன் மகேந்திரன் முக்கிய சந்தேகநபராவார், ஆனால் இவர் குறித்துப் பொறுப்­புச் சொல்ல வேண்­டி­ய­வர்­கள் தற்­பொ­ழுது அமைதியாக இருக்­கின்­ற­னர் என குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமன்றி இதற்கு கண்டியில் இடம்பெறும் பதற்­ற­மான சூழ்நிலையே கரணம் என கூறிய மஹிந்த, மகேந்­தி­ர­னைக் கைது செய்யத் தற்­பொ­ழுது எந்­த­வித முனைப்பும் காட்டாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என கூறினார்.

ஆனால் மகேந்­தி­ர­னின் மோசடி நட­வ­டிக்­கை­கள் குறித்து மக்கள் ஒரு­ போதும் மறக்க மாட்­டார்­கள் என்­றார்.

Tamil Top News

Our Other websites :