சுவிஸூக்கு மீண்டும் தப்பிச் சென்றவருக்கு அடித்தது அதிர்ஸ்டம்

Swiss government compensated large number Sri Lankan refugee
Swiss flag

(Swiss government compensated large number Sri Lankan refugee)

சுவிட்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவருக்கு சுவிஸர்லாந்து அரசாங்கம் பெருந்தொகை இழப்பீடு வழங்கியுள்ளது.

பிற நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள் இங்கு கைது செய்யப்பட்டு கடும் விசாரணைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வௌியிட்டிருந்தது.

இருந்தபோதும், கடந்த காலங்களில் இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்தது.

அதன்படி, ஏற்கனவே தஞசம் கோரியிருந்த இலங்கை அகதி ஒருவரது விண்ணப்பமும் சுவிஸ் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்டடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் சுவிஸூக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் தனக்கு நியாயம் கோரி வழக்கொன்றையும் தாக்கல் செய்தார்.

அவர் துன்புறுத்தப்பட்டமையை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு சுவிஸ் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கம் அவருக்கு பெருந்தொகையான இழப்பீட்டை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

(Swiss government compensated large number Sri Lankan refugee)

More Tamil News Today

Our Other websites :