புதுக்குடியிருப்பில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது

pudukudiyiruppu land release delayed army tamilnews

(pudukudiyiruppu land release delayed army tamilnews)

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட வேண்டியுள்ள காணி தொடர்பில் இன்று (12) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் ஒன்று இடம்பெற்றது .

இதன் ஒரு அங்கமாக பழைய வேணாவில் பகுதியில் படையினரின் பண்ணை உள்ள 200 ஏக்கர் காணியினை பிரதேச செயலகம் கையகப்படுத்த தீர்மானம் எட்டப்பட்டது.

பழைய வேணாவில் பகுதியில் 200 ஏக்கர் காணியில் பயிர்செய்கை மேற்கொள்ள முடியாதவாறு 682 ஆம் படையினர் நிலைகொண்டுள்ளார்கள் அங்கு சிறு பண்ணை ஒன்றினை வைத்துள்ளார்கள்.

அதனை விடுவிக்க பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் கடந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரனால் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் இந்த விடயம் கலந்தாலோசிக்கப்பட்டது.

இன்று இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்ட போது குறித்த யாருடைய ஆளுகையின் கீழ் உள்ளது என்பது தொடர்பில் குழப்ப நிலை தோன்றியது.

இந்த பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணை உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போது, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தராத காரணத்தால் குறித்த காணி எந்த பகுதி திணைக்களத்தின் கீழ் இருக்கின்றது என்று தெரியாத நிலை உள்ளது.

68 ஆவது படை பிரிவினர் தங்களுக்கு கீழ் இல்லை என்று தெரிவித்தார்கள்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினை சார்ந்தவர்கள் சொல்கின்றார்கள்.

அந்த காணியினை பிரதேச செயலாளர் கையகப்படுத்தி அதற்கான அபிவிருத்தியினை மேற்கொள்ள வேண்டும் என இணைத் தலைவர் தெரிவித்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அதன் அளவுகளை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைத்தால்தான் குறித்த பகுதியில் யாருடைய காணி யாருடைய பாதுகாப்பில் இருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(pudukudiyiruppu land release delayed army tamilnews)

Top Stories

Our Other websites :