அறிவார்ந்த நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் முதலிடம்!

order intellectual cities Singapore first place

(order intellectual cities Singapore first place)

அறிவார்ந்த நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

Juniper Research நிறுவனம், நேற்று வெளியிட்ட கடந்தாண்டுக்கான உலகளாவிய அறிவார்ந்த நகர் செயல்திறன் குறியீட்டில் அனைத்துப் பிரிவுகளிலும் சிங்கப்பூர் முதலிடத்தில் வந்துள்ளது.

அத்தோடு,  அறிவார்ந்த தொழில்நுட்பத் திட்டங்களின் மூலம் நடமாட்டம், சுகாதாரம், பாதுகாப்பு, உற்பத்தித்திறன் ஆகிய நான்கு பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் பயனடைகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளது ஆய்வு.

குறிப்பாக, குடியிருப்பாளர்களுக்குப் பயனுள்ள வழிகளில் தொழில்நுட்பம் எவ்வாறு கையாளப்பட்டது? என்றும் அது அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்தியது? என்றும் கண்டறியப்பட்டது.

அந்த வரிசையில், போக்குவரத்தை நிர்வகிக்கும் அறிவார்ந்த தீர்வுகள், மின்னிலக்க மயமாக்கப்பட்ட சுகாதாரச் சேவைகள், குற்ற நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கும் அறிவார்ந்த கண்காணிப்புச் சோதனை முறைகள் போன்றவற்றைப் பற்றி ஆய்வு குறிப்பிட்டிருந்தது.

இவ் ஆய்வு,  கடந்த ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

tags:-order intellectual cities Singapore first place

Related Stories

Our Other websites :

today top story:-

சிங்கப்பூரில் லென்ஸ் இல்லாமல் வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் புதிய கேமரா விரைவில்.