எட்டு மாதங்களாக ஸ்ரீதேவி என்னுடன் பேசாமல் கோபமாகவே இருந்தார் : புலம்பித் தள்ளும் போனி கபூர்..!

Eight months Sridevi Angry Boney Kapoor open talk,Eight months Sridevi Angry Boney Kapoor open,Eight months Sridevi Angry Boney Kapoor,Eight months Sridevi Angry Boney,Eight months Sridevi Angry

(Eight months Sridevi Angry Boney Kapoor open talk)

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தன் காதலை சொன்ன போது ஸ்ரீதேவி அவருடன் 8 மாதங்களாக பேசவே இல்லையாம்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வயப்பட்டார்.

அதன்பின்பு முதல் மனைவியிடம் உண்மையைச் சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் போனி.

இது குறித்து போனி கபூர் பேட்டி ஒன்றில் முன்பு கூறியதாவது.. :-

”நான் ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்டபோது, அது முதலில் ஒருதலையாகத் தான் இருந்தது.

ஒரு முறை சென்னையில் என் நண்பர், அவரின் மனைவி, நான், ஸ்ரீதேவி, அவரின் அம்மா மதிய உணவுக்கு ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது.

அந்நிலையில், ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் அங்கு வர முடியவில்லை. அது தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்தார் யாரும் இல்லாமல் முதல்முறையாக வெளியே வந்தது.

அதன்பின் மதிய உணவு சாப்பிட்டு முடிந்ததும், நான் ஸ்ரீதேவியை வீட்டில் விடச் சென்றபோது என் காதலை அவரிடம் தெரியப்படுத்தினேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு 8 மாதங்களாக அவர் என்னுடன் பேசவே இல்லை.

1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அப்போது ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தவுடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் மகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அதன் பின்பு, 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஸ்ரீதேவி எங்கள் வீட்டில் தங்கினார். அப்போது அவரின் கோபம் மாறி சமாதானம் ஆனார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அன்று தொடக்கம் இன்று வரை, அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.” இவ்வாறு போனி கபூர் கூறியிருந்தார்.

<<RELATED POST>>

விக்ரம் மகனுடன் டூயட் பாட தயாரான கௌதமி மகள்..!

சிங்கப்பூர் உணவகத்தில் ஸ்ரீதேவியின் உருவப் பொம்மை : இணையத்தில் வைரல்..!

லண்டன் மியூசியத்தில் சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!

அஜித்துடன் மோதும் அர்ஜுன் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தட்டிப் பறித்த ப்ரியா வாரியர்..!

தமிழில் நடிக்க மறுக்கும் மரிய நடிகை : ஒல்லி நடிகர் தான் காரணமா..!

மீண்டும் தள்ளிப் போகும் காலா : ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஈழன் இளங்கோவின் படைப்பில் உருவாகியுள்ள ’சாட்சிகள் சொர்க்கத்தில்’ பட ட்ரெய்லர் வெளியீடு..!

ஸ்ரீதேவி இறக்கும்போது கூடவே இருந்த தங்கை அமைதி காப்பது ஏன்..? : சந்தேகத்தில் பலர்..!

Tags :-Eight months Sridevi Angry Boney Kapoor open talk

**Our Other Sites** 

Our Other Sites News :-

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரருக்கு தடை!!!