சோதனையில் வெற்றி: ஓடுவதற்கு தயாராகிறது சீனாவின் புல்லட் ரயில்

china launches longest bullet train news update

(china launches longest bullet train news update)
உலகின் மிக நீண்ட புல்லட் ரயிலின் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயிலை விரைவில் சேவைக்கு விட சீனா ஆயத்தமாகி வருகின்றது. மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் வகையிலான இந்த புல்லட் ரயில், அதிநவீன வசதிகள் கொண்ட 16 பெட்டிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில், உள்கட்டமைப்பு விமானத்தைப் போல இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொகுசு இருக்கைகள், தொலைக்காட்சி, ஏசி போன்ற வசதிகளோடு, நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒரே நேரத்தில் ஆயிரத்து 100 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கலாம். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் 415 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலே, உலகின் முதல் நீளமான புல்லட் ரயிலாகும்.#Longest Bullet Train

OUR OTHER SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

Tags: china launches longest bullet train news update,Tamil technology news,technology news in tamil,new nokia smartphones launched news tamil