துப்பாக்கி முனையில் சாரதி தாக்குதல் : விளக்கமறியல் நீடிப்பு

Brutal Attack on private bus driver SPC member wife remanded

Brutal Attack on private bus driver SPC member wife remanded

Tamil News : தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பத்தரமுல்ல – கொஸ்வத்த பகுதியில் தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுனும் அவரது மனைவியும் துப்பாக்கியுடன் பேருந்தின் சாரதியைத் தாக்கினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.

இதன் போது, மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Top News

Our Other websites :