தோணி கவிழ்ந்து மரணித்த ஐவரின் உடலங்களும் ஒரே குழியில் அடக்கம்

bodies deceased five buried pit boat accident victims tamilnews

(bodies deceased five buried pit boat accident victims tamilnews)

தாமரைப் பூப்பறிக்கச் சென்ற பொழுது தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி மரணித்த ஐவரின் உடலங்களும் இன்று (13) ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய குளத்திற்கு கடந்த 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் 4 சிறுவர்கள் மற்றும் தோணி செலுத்துனர் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

அவர்களின் உடலங்கள் திருகோணமலை நிலாவெளி இந்து மயானத்தில் இன்று (11) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதற்காக கிராம பொதுமக்கள், அனுதாபிகள் என அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்திற்குச் சென்று பொங்கி வழிபட்டு பொழுதைக் கழிக்கச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங் கொடுத்திருந்தனர்.

நிலாவெளி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9) சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் தோணியை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி மரணமடைந்திருந்தனர்.

சேறு நிறைந்த அந்தக் குளத்திலுள்ள தாமரைப் பூக்களை இவர்கள் பறித்துக் கொண்டிருந்த சமயமே தோணி கவிழ்ந்து அனர்த்தம் நேர்ந்துள்ளது.

(bodies deceased five buried pit boat accident victims tamilnews)

More Tamil News Today

Our Other websites :