ஊதிய அதிகரிப்பு விரைவில்?

Australia Workers Low wage

Australia Workers Low wage

அவுஸ்திரேலியாவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களின் வாராந்த சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

‘Australian Council of Trade Unions’ இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதன்படி வாராந்த ஊதியத்தை 50 டொலர்களால் அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை Fair Work Commission இடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இப்படியான சம்பள அதிகரிப்பானது நாட்டின் பொருளாதாரத்துக்கு எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துமென்பதை மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டு இக்கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டுமென நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை இவ் அதிகரிப்பிற்கு தொழில் வழங்குனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான அதிகரிப்பானது நல்லதல்லவென தெரிவித்துள்ள அவர்கள், குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் முடிவெடுப்பதற்கு இது உகந்த தருணம் அல்லவென தெரிவித்துள்ளனர். Australia Tamil News

Other Stories