தீக்கிரையாக்கப்பட்ட ஹோட்டல் : 18-22 வயது இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Attack on Anamaduwa hotel 7 remanded

Attack on Anamaduwa hotel 7 remanded

Tamil News : ஆனமடுவ நகரிலுள்ள மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆனமடுவை மற்றும் அயல் பகுதிகளையும் சேர்ந்த 18 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட 7 இளைஞர்களே இவ்வாறு விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் முதலில் ஹோட்டலுக்கு முன்னால் வந்து பெற்றோலை ஊற்றிவிட்டு, பின்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் மூன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. கெமராவைப் பயன்படுத்தி ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஏனையோர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஹோட்டலை 200 பிரதேச மக்கள் இணைந்து 18 மணித்தியாலங்களில் திருத்தி அமைத்து, உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Top News

Our Other websites :