கங்கை ஆற்றில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி படகு சவாரி

French President Emmanuel Macron boat ride India tamil news

(French President Emmanuel Macron boat ride India tamil news)

இந்தியாவிற்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான். கடந்த 9ஆம்திகதி இந்தியா வந்தார்.

அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் மெக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அப்போது அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதை தொடர்ந்து இன்று,

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தன் மனைவியுடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரை வந்தடைந்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிகபெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கங்கை ஆற்றில் படகில் சென்று பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோருடன் வாரணாசி நகரை பார்வையிட்டார்.

கங்கை ஆற்றங்கரையில் கோயில்கள் நிறைந்த இந்தியாவின் பழைமையான வாரணாசி நகரின் இரு கரைகளின் ஓரம் நின்றிருந்த மக்கள் அளித்த உற்சாக வரவேற்பை அவர்கள் ஏற்றுகொண்டனர்.

(French President Emmanuel Macron boat ride India tamil news)

Top Story

Our Other websites :