காலை வெட்டி தலையணையாக்கிய முட்டாள் வைத்தியர்கள் – சாரதிக்கு நடந்த கொடுமை

One shocked doctors kept leg pillow injured driver

(Tamilnews : One shocked doctors kept leg pillow injured driver)

விபத்தில் சிக்கிய ஒருவரின் காலை துண்டித்த வைத்தியர்கள், அந்த காலையே அவருக்கு தலையணையாக வைத்த செய்தியொன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் பாடசாலை மாணவர்களுக்கான வாகன ஓட்டுநா் ஒருவர் தனது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார்.

படுகாயம் அடைந்த இளைஞர், அருகில் இருந்த அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞரின் காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து அந்த இளைஞரின் கால் துண்டிக்கப்பட்டதுடன், துண்டிக்கப்பட்ட காலை அவருக்கே தலையணையாக வைத்த வைத்தியர்கள் வேறு அறைக்கு மாற்றியுள்ளனர்.

வைத்தியசாலையில் தலையணை பற்றாக்குறையால் இவ்வாறு வைத்தியர்கள் செயற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது, இது தொடரடபான புகைப்படம் ஒன்று சமூகவலைத் தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த குற்றச்சாட்டை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.

நோயாளிகளின் அறைக்குள் துண்டிக்கப்பட்ட கால் எப்படி வந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

(One shocked doctors kept leg pillow injured driver)

Related Story

Our Other websites :