தலைமுடியை நன்றாக சீவுகிறேன் – தமிழிசை

hair regularly tamilasi answer memes Indian tamil news

(hair regularly tamilasi answer memes Indian tamil news)

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழகத்தில் தாமரை மலரும் எனும் ஆசையோடு செயற்படுபவர்.

அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வரும் இவரை, அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கொள்கை சார்ந்து விமர்சிப்பவர்களைவிட தோற்றத்தை வைத்து விமர்சிப்பவர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக உள்ளனர்.

அதுவும் தமிழிசையை விமர்சிப்பவர்கள் அவரின் தலைமுடியை வைத்து, நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடுவது வாடிக்கை.

சமூக வலைத்தளத்தில் தன்னை வைத்து மீம்ஸ் போடுபவர்கள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று (11)கூறியது

 

” ஊர்பணத்தை சுருட்டியவர்களை கூட மீம்ஸ் போடுபவர்கள் விட்டு விடுகிறார்கள்.
ஆனால் சுருட்டை முடியை வைத்துள்ள என்னை விட்டு வைப்பதில்லை.

இதற்காகவே இப்போதெல்லாம் தலைமுடியை நன்றாக சீவி வருகிறேன். என்னையும் வடிவேலுவையும் இணைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.

இதில் ஒரு ஒற்றுமை வடிவேல் வீடும் என் வீடும் அருகில் இருக்கின்றன. இன்னொன்று மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழிசை என்ற செந்தமிழ் பெயர் சமூக வலைதளத்தில் டுமிழசை என அறியப்படுவதும் குறிப்பிடத்தக்கது

(hair regularly tamilasi answer memes Indian tamil news)

More Tamilnews

Our Other websites :