சங்கா, ஜுனைட் கான் அசத்தல்!!! : மீண்டும் வென்றது முல்டன் சுல்தான்ஸ்!!! (காணொளி)

junaid khan hat trick PSL 2018 news Tamil
(junaid khan hat trick PSL 2018 news Tamil)

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்காரவின் அதிரடி மற்றும் ஜுனைட் கானின் ஹெட்ரிக் ஆகியவற்றின் உதவியுடன் முல்டன் சுல்தான்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாஹுர் கெலண்டர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார 44 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களையும், சொயிப் மலிக் 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களையும் குவித்தனர்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லாஹுர் அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. ஒரு கட்டத்தில் லாஹுர் அணி 14.2 ஓவர்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை குவித்திருந்தது.

எனினும் பின்னர் சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹீர் ஒரே ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும், ஜுனைட் கான் ஹெட்ரிக் விக்கட்டுகளையும் கைப்பற்ற, லாஹுர் அணி 136 ஓட்டங்களுக்கு சுருண்டு 43 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

லாஹுர் அணியின் பர்கர் ஷமான் 49 ஓட்டங்களையும், உமர் அக்மல் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.

பந்து வீச்சில் இம்ரான் தாஹீர் 3 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், ஜுனைட் கான் தான் வீசிய 17 ஓவரில் யசீர் ஷா, டெல்போர்ட் மற்றும் ரஷா ஹசன் ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தி, ஹெட்ரிக் விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதன்படி இரண்டு முல்டன் சுல்தான்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை தனதாக்கியுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : junaid khan hat trick PSL 2018 news Tamil