முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை அறிவிப்பு

Amnesty International new report Sri Lanka become defenseless country

(Amnesty International new report Sri Lanka become defenseless country)

உலக நாடுகளின் தரப்பட்டியலில் இலங்கையானது முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடங்களில் பௌத்த தேசிய வாதக் கொள்கை மேலோங்கி வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Image result for sri-lanka listed among countries unsafe for muslims/

அத்துடன் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பௌத்த அடிப்படைவாத பிக்கு குழுவொன்று தென்னிலங்கை பூஸ்ஸ பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Image result for sri-lanka listed among countries unsafe for muslims/

அதேவேளை, தென்னிலங்கை காலியில் உள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் என்பன உடைத்தெறியப்பட்டன.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் மனிதவுரிமை அறிக்கைகளின் படி சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பு இந்த அறிக்கையினை வௌியிட்டுள்ளது.

Image result for sri-lanka listed among countries unsafe for muslims/

தெற்காசிய நாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image result for sri-lanka listed among countries unsafe for muslims/

(Amnesty International new report Sri Lanka become defenseless country)

TAMIL NEWS TODAY

Our Other websites :