மக்கள் நீதி மய்யம்.. தமிழகம் விழித்தெழட்டும்.. டிவிட்டரிலும் அறிமுகப்படுத்திய கமல்!

Tamilnadu wake touch Kamal makkal nedhi mandram

(Tamilnadu wake touch Kamal makkal nedhi mandram)

கட்சிப்பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய கையோடு டிவிட்டரிலும் கட்சிப் பெயர் மற்றும் கொடியை கமல் அறிமுகப்படுத்தினார்.

நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் தொடக்கத்திலேயே கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.

வெள்ளை, சிவப்பு, கறுப்பு நிறங்கள் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளன.

நடுவில் நட்சத்திரமும் இடம்பெற்றுள்ளது.

கட்சிப் பெயர் மற்றும் கொடியை மதுரை ஒத்தக்கடையில் அறிமுகப்படுத்திய கையோடு தனது டிவிட்டர் பக்கத்திலும் நடிகர் கமல்ஹாசன் கட்சிப் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதில் நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும். என தெரிவித்துள்ளார்.

(Tamilnadu wake touch Kamal makkal nedhi mandram)

Related Stories

Our Other websites :