அடித்துக் கொல்லப்பட்ட கொலையாளி – சுட்டுக் கொல்லபட்ட முதலாளி: நேரடி CCTV காணொளி நடந்தது என்ன?

(Colombo Courts Hulftsdorp complex gun shoot murder footage Reporting)

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம்
சந்தேகத்திற்குரிய ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி
சூட்டில் வாடகை வாகன பதிவு நிறுவனத்தின் உரிமையாளரான
றிஸ்கான் (39) என்பவர் உயிரிழந்த வீடியோ காட்சிகள்
வெளியாகியுள்ளன.

அதேநேரம், துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்ல
முற்பட்ட இருவரை பொதுமக்கள் துரத்திச் சென்றதில் ஒருவர்
தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரே றிஸ்கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் காணொளியை நோக்குமிடத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்லும் நோக்கில் தயாரான நிலையில் இருக்கின்றமை புலப்படுகின்றது.

நீள நில மேற்சட்டை அணிந்த ஒருவரும் பச்சை நிறத்தை ஒத்த மேற்சட்டை அணிந்தவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்திறங்கி துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவராக கருதப்படுபவர் பாதையின் மறுபுறத்திற்கு மாறிச் சென்று சம்பவத்தில் கொல்லப்பட்டவரான றிஸ்கான் மீது தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவரை நோக்கி ஒடுகிறார்.

எனினும், மோட்டார் சைக்கிள் இயங்க மறுத்த நிலையில் அதில் அமர்ந்திருந்தவர் வேறு திசையில் தப்பியோடுகிறார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான தயார் நிலையும், அதன் பின்னரான பரபரப்பு சூழ்நிலையும்

அந்த தருணத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பொதுமக்களிடம் சிக்குகிறார்.

அவரை பொதுமக்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் உயிருக்கு போராடிய நிலையில், பொலிஸார் தாக்குண்டவரை குண்டுக்கட்டையாக தூக்கிச் செல்கின்றனர்.

அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கருதப்படுபவர் காவல்துறையினரால் குண்டுக் கட்டையாக தூக்கிச் செல்லப்படும் காட்சி.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தித் தாள்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

றிஸ்கான் என்பவர் முன்னாள் பாதாள உலக உறுப்பினர் என கருதப்படும்  குடு நூர் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பிரபல பத்திரிகை ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், தொழில் போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடு நூர் என்பவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட காலத்தில் தற்போது துப்பாக்கிச் சூட்டில் பலியான றிஸ்கான் பதின்ம வயதைக் கூட தாண்டாதவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பொதுவாக றிஸ்கான் என்பவர் பிரதேச மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர் எனவும், சமூக பணிகளிலும் ஈடுபடக் கூடியவர் என்றும் பிரதேசவாசிகள் தமிழ்நியுஸின் அலுவலக செய்தியாளருக்கு தெரிவித்தனர்.

றிஸ்கான் தொடர்பாக பிரதேச பொதுமக்களின் நிலைப்பாடு

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வாடகை வாகன நிறுவன திறப்பு நிகழ்வு

(Colombo Courts Hulftsdorp complex gun shoot murder footage Reporting)

Related Stories  

Our Other websites :