காதலியின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட சமுகவிரோத காதலனின் காவாலித்தனத்தால் மானபங்கப்பட்ட பெண் ! ஒரு அதிர்ச்சி வாக்குமூலம் !

Boy Friend Release Abused Photo Revenge Vavuniya Girl Truth Story

(Boy Friend Release Abused Photo Revenge Vavuniya Girl Truth Story)

எமது தமிழ் பண்பாட்டில் ஆணும் பெண்ணும் சமமான உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் என்னும் அடிப்படை எண்ணக்கருவை மையாமாக கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , அவதூறு பரப்பும் நடவடிக்கைகள் , பழிவாங்கல்கள் போன்ற சமுக விரோத செயல்களை உற்று நோக்கி பாதிப்படைந்த பெண்களுக்கு நீதி பெற்று கொடுக்க எமது நெற்றிக்கண் இணையம் என்றைக்கும் பின்னின்றது கிடையாது.

காலம் காலமாக பெண்களின் மீதாக தொடரும் வன்முறையின் மற்றுமொரு அதிர்ச்சி தரும் வடிவம் இதோ :

வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலருடன் தொலைபேசியில் உரையாடிய போது எடுக்கப்பட்ட தகாத புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதனால் ஊர் மக்களாலும், இளைஞர்களாலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு குறித்த பெண் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

தன் மீதுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே தனது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நெற்றிக்கண் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட பெண் ஒருவரின் தகாத முறையிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தேர்தலுக்கு முன்தினம் வெளியிடப்பட்டன.

இந்தப் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், குறித்த பெண்ணின் குடும்ப வாழ்க்கை மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

வவுனியாவில் தற்பொழுது வசித்துவரும் இந்த பெண் வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவரை காதலித்து வந்துள்ளார்.

குறித்த நபரை திருமணம் செய்வதற்கும் நிச்சயிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட தீர்மானித்தார்.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்டு நீ வெற்றி பெற்றால் என்னை வெறுத்து விடுவாய். அதனால் தேர்தலில் போட்டியிட வேண்டாம். அவ்வாறு போட்டியிட்டால் உனது தகாத புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டுவிடுவேன் என்றும் குறித்த பெண்ணிடம் அவரது காதலர் எச்சரிக்கை விடுத்த போதிலும், அதற்கு மறுப்புத் தெரிவித்து தேர்தலில் களமிறங்கினார்.

இதனை விரோதமாகக் கொண்ட அவரது காதலர், குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடிய போது எடுத்த தகாத புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

எனினும் இவ்வாறான புகைப்படங்கள் இரவு நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் போது, தனக்குத் தெரியாமல் எடுத்துள்ளதாகவும் தன்மீதான ஆத்திரம் காரணமாகவே இவ்வாறு பதிவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இந்த பெண் தற்போது நிர்க்கதியாகிய நிலையில், ஊர் மக்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்பொழுது எமது செய்திப் பிரிவை நாடியுள்ளார்.

இது வெறும் செய்தி கிடையாது, இதன் பின்னணியில் ஆராய பட வேண்டிய விடயம் நிறையவே உள்ளது.

முதலில் இந்த சமுக விரோத செயலை அரங்கேற்றிய நபரின் பின்னணி மிகவும் கேவலமானது. இதனை அறியாது குறித்த பெண் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த மோசமான அனுபவத்தை பெற்ற பின்னர் தான் அந்த காவாலியின் சுயரூபம் வெளியில் தெரிந்திருக்குறது. குறித்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் முதலாவது சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைதாகிய நிலையில் , விசாரணை காலத்தில் பிணையில் வெளிவந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்ற குற்றவாளி ஆவார்.

அடுத்தது இந்த கேவலமான செயலை செய்ய தூண்டிய அவரின் காரணம் கூட மிகவும் பிற்போக்குதனமானது. அதாவது தன்னுடன் தொடர்பில் இருக்கும் பெண் , சமுக மட்டத்தில் உயர்ச்சி அடைந்தால் அது தன்னை பாதிக்கும் என்னும் மனநிலை மிகவும் கீழ்த்தரமானது.

அடுத்தது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சில விடயங்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தற்கால உறவுமுறையில் எந்தவிதத்திலும் சமுக வலைத்தள மற்றும் டிஜிட்டல் தொடர்புகளில் அதித நம்பிக்கை வைத்தல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எமது சகோதரிகள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ளவேண்டும், எந்த காரணம் கொண்டும் உங்களின் எந்த வகை உறவுக்கும் அது கணவராக இருந்தால் கூட ஆபாச படங்களை எடுக்க கூடிய முறையில் தொலை தொடர்புகளை பேண வேண்டாம். இது ஏதோ ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஆபத்தாக அமையும்.

குறித்த நபரின் கீழ்த்தரமான சமுக விரோத செயலை எமது மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பல சம்பவங்கள் பல பெண்களின் வாழ்க்கையை அழித்து அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.

இந்த விடயத்தில் நெற்றிக்கண் செய்திப்பிரிவு மேலும் கவனத்தை செலுத்தி கொண்டே இருக்கும்.

வழமையாக பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை வெளியில் கூறினால் அவமானம் என கருதி பாதிக்கப்பட்ட பெண்கள் மௌனம் காப்பதே சமுக விரோதிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் , எனவே தனக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகத்தை துணிச்சலாக வெளிப்படுத்திய இந்த பெண்ணின் நடவடிக்கைக்கு நெற்றிக்கண்ணின் பாராட்டுக்கள்.

பாதிக்கப்பட்ட பெண் எதிர்பார்க்கும் நீதி அவருக்கு கிடைக்கும் வரை நெற்றிக்கண் எப்போதும் திறந்தே இருக்கும்.