பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு : அசைக்க முடியாது என்கிறார்

Prime Minister ranil wickramasinghe says continue PM constitution

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது.

எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுத்தேர்தலில் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை அவ்வாறே தொடர வேண்டும். இதில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள கூடாது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் பெறுபேறுகளை ஏற்றுகொள்கின்றேன். இதற்காக பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணியினர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைத்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் கருஜயசூரியவிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நபர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கவது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பால் தெற்கு அரசியல் மிகவும் சூடுப்பிடித்துள்ளது.

Related Stories  

Our Other websites :

Tags: Prime Minister ranil wickramasinghe says continue PM constitution, Prime Minister ranil wickramasinghe says continue PM constitution