புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

One casualties attack school shootings Florida

(One casualties attack school shootings Florida)

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் நேற்று (புதன்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றி பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மாணவரா அல்லது ஆசிரியரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தெரிகிறது.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியை மூடிய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், புளோரிடாவின் ஆளுநர் ஸ்காட்டை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

(One casualties attack school shootings Florida)

Related story

Our Other websites :