இனி எவரும் தலைகீழாக ஆட முடியாது, மஹிந்த வந்து விட்டார் – ஞானசார எச்சரிக்கை

face problems future Never come Gnanasara pointed possibilities accusing

(Mahinda rajapaksha session starts local election Gnanasara alert)

ஆட்சி கவிழ்க்கப்பட்டார் என்று வாதாடியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தனது பலத்தை நிரூபித்துவிட்டார்.

நாட்டை நேசிப்பவர்கள், பௌத்த மதகுருமார் உள்ளிட்டோரின் இலக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்குள் தனது செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளின் ஊடாக பாரியளவில் சமூக நலன்களை பேணியுள்ளார்.

அதனால் அனைத்து சமூகத்தினரதும் அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது.

அதனை ஏனைய தரப்பினர் தட்டிச் செல்ல முடியாது என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

எனினும், ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஆதரவான இணையத்தளம் ஒன்றில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும், நான் கூறியது போல் போலியான செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இல்லை. மேடைகளிலும் ஏறவுமில்லை.

நாங்கள் கட்சி அரசியலில் ஈடுபடுவதும் இல்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த செய்தியை வெளியிட்டதாக நினைத்து கொண்டு ஜீ.எல். பீரிஸ் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி என ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று பொது பலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

(Mahinda rajapaksha session starts local election Gnanasara alert)

Related story

Our Other websites :