ரஷ்யாவில் புறப்பட்ட 10 நிமிடத்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து- 71 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்(வீடியோ இணைப்பு)

(feared 71 passengers killed plane crash Russia)

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 71 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சரதோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமான AN-148 ரக விமானம் மாஸ்கோவின் டொமொ டி டொவோ (domodedovo) என்ற விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய-கஜகஸ்தான் எல்லையில் உள்ள ஓர்ஸ்க் (Orsk) எனும் இடத்துக்குப் புறப்பட்டது.

65 பயணிகள், விமானக்குழுவைச் சேர்ந்த 6 பேர் என 71 பேருடன் பயணித்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது மாஸ்கோ அருகே ராமன்ஸ்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுவதால், 71 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தைத் தேடி மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

(feared 71 passengers killed plane crash Russia)

Today Related News

Our Other websites :