கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கை

Sri Lanka connecting black list
(Sri Lanka connecting black list)

ஐரோப்பிய ஒன்றிய பண தூய்மையாக்கல் கறுப்பு பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், இலங்கை, துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் இந்த கறுப்பு பட்டியலில் இலங்கையும்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக   ஐரோப்பிய நாடாளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் தயாரிக்கும் போது, பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, குறித்த பட்டியலுக்கு ஆதரவாக 357 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக 283 வாக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

(Sri Lanka connecting black list)

Top Stories :

Our Other websites :