யார் இந்த எலொன் மஸ்க் (Elon Musk)?

Ellen Mask Canadian American engineer entrepreneur inventor

வாழ்க்கையில் நாம் காணும் தோல்விகள் மாத்திரமே நம்மை மேலும் முன்னேற்ற பாதையில் வலிமையாக உந்திச் செல்ல
உதவுகின்றன.

எப்பொழுதாவது நாம் தோல்வி அடைந்திருக்கின்றோமா? என சிந்தித்து பார்த்தோமானால், கண்டிப்பாக நம்மில் ஒவ்வொருவரும்
தோல்வியடைந்திருப்போம்.

ஆனால், நம்மில் எத்தனை பேர் ஒவ்வொரு தோல்விக்கு பின்னரும் முயற்சித்திருக்கிறோம்? இது தொடர் தோல்விகளையே
வாழ்க்கையாக கொண்டு புதிய உலகை படைக்க புறப்பட்ட ஒரு தன்னம்பிக்கையாளரின் கதை.

எலன் மஸ்க், ஒரு கனேடிய அமெரிக்க பொறியாளர், தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்.

இவர்தான் இந்த உலகின் உண்மையான “ஐயர்ன் மேன்” (Iron Man) என்கின்றனர்.

தான் ஆரம்பித்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேலை மறுப்பு, கடும் நோய் என எலன் மஸ்க் வாழ்வில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை எனலாம்.

அவரின் தோல்விகளின் பட்டியல் மிக நீண்டது, ஆனால் நம்மால் எளிதாக கடந்து சென்று விடக்கூடியதல்ல. எலன் மஸ்கின்
தோல்விகளை பற்றி இப்போது பார்ப்போம்.

1995 – நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தில் வேலைக்கான விண்ணப்பம் நிராகரிப்பு.

1996 – அவரால் தொடங்கப்பட்ட ஜிப்2 (Zip2) நிறுவனத்தில் இருந்து CEO பணிக்கு தகுதியற்றவர் என்ற காரணத்தால் CTO வாக
பதவியிறக்கம்.

1999 – அடுத்த முயற்சியான பேபால் (Paypal) நிறுவனம், பத்து மிக மோசமான வணிக யோசனைகளில் ஒன்றாக சர்வதேச ரீதியில்
வாக்களிக்கப்பட்டது.

1999 – புதிதாக வாங்கிய 1 மில்லியன் டாலர் விலை கொண்ட McLaren F1 கார் சிதைவு. (இந்த வாகனம் மொத்தமே 106 தான்
தயாரிக்கப்பட்டது)

2000 – பேபால் (Paypal) நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம்.

2000 – செரிப்ரல் மலேரியா என்ற கொடுமையான மூளை காய்ச்சல் நோயினால் கடும் பாதிப்பு.

2001 – செவ்வாய்க்கு எலி, தாவரங்கள் அனுப்பும் இவரது திட்டத்திற்கு ராக்கெட் வழங்க ரஷ்யா மறுப்பு.

2002 – ரஷ்யாவின் ஒவ்வொரு ராக்கெட்க்கும் 8 மில்லியன் டாலர் விலை நிர்ணயம். மலிவு விலையில் ராக்கெட் தயாரிக்க SpaceX
நிறுவனம் தொடக்கம்.

2002 – பிறந்த பத்தே வாரத்தில் முதல் மகன் மரணம்.

2006 – SpaceX நிறுவனத்தின் முதல் ராக்கெட் தரையிலிருந்து மேலெழும்பிய 33 வினாடிகளில் வெடித்து சிதறியது.

2007 – நம்பகத் தன்மையை நிறுவ வேண்டிய இக்கட்டான சூழலில் 2வது ராக்கெட் பூமியின் சுற்று வட்டாரப் பாதையை
அடைவதற்கு முன்பே எஞ்சின் அணைந்ததால் தோல்வி அடைகிறது.

2008 – 3 வது ராக்கெட் நாசா (NASA) செயற்கைகோளுடன் கடலில் விழுந்து படுதோல்வி.

2008 – டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையால் திவாலாகும் நிலை.

2013 – SpaceX நிறுவனத்தின் முதல் மறு சுழற்சி செய்யக் கூடிய ராக்கெட் துணைக் கோள் ஏவுகலம் கடலில் தரையிறங்கும் போது
தோல்வி.

2014 – Tesla மாடல் S கார் பல்வேறு விமர்சனங்களுடன் கடுமையான பேட்டரி பயன்பாடு பிரச்சனை கண்டுபிடிப்பு.

2015 – SpaceX நான்காவது ராக்கெட் செலுத்தும்போது வெடிப்புக்கு உள்ளாகிறது.

மற்றும் இரண்டு வெடி விபத்துகள், ஏவுகலம் ஆளில்லா கப்பலில் தரையிறங்கும் போது.

2016 – Tesla மாடல் X உறுதியளித்த திகதியிலிருந்து 18 மாதங்கள் தாமதமாக வாங்கியவர்களிடம் ஒப்படைப்பு.

2016 – Facebook நிறுவனத்தின் ஆப்பிரிக்க பயன்பாட்டுகளுக்கான 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள ராக்கெட்டுகள் வெடித்து
சிதறல். 4, 5 மற்றும் 6 வது ஏவுகலங்கள் ஆளில்லா கப்பலில் தரையிறங்கும் போது தோல்வி.

சாதனைகள்:

இவ்வளவு தோல்விகளையும் கடந்து எலன் மஸ்க் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல.

அவரை சிலர் அவ்வப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் ஒப்பிடுவதுண்டு.

இருவருமே அளப்பரிய சாதனைகளை செய்தவர்கள், கடுமையான தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வெற்றிக் கனியை
சுவைத்தவர்கள்.

இருப்பினும் இருவரும் மனித சமுதாயத்தின்பால் கொண்ட அணுகுமுறையை கணக்கிட்டால், எலன் மஸ்க் எவ்வாறு தனித்தன்மை
கொண்டவர் என்பதை நம்மால் உணர முடியும்.

முக்கிய முயற்சிகள்:

ஸ்பேஸ் எக்ஸ் (Space X)

spacex 300×37 – எலன் மஸ்க் : தோல்வி வரலாறும், மீண்டு வந்த கதையும்

இது மனித குலத்தை பல கோள் உயிரினமாக மாற்ற வேண்டும் என்ற எலன் மஸ்க் கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வையின்
காரணமாக விண்வெளி போக்குவரத்து செலவுகளை குறைப்பதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட விண்வெளிப் போக்குவரத்து
வணிக நிறுவனம்.

டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors)

tesla 233×300 – எலன் மஸ்க் : தோல்வி வரலாறும், மீண்டு வந்த கதையும்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை கொண்ட மின்சார கார்களை தயாரித்து பெருந்திரள் மக்களை அடைவதை
குறிக்கோளாக கொண்ட நிறுவனம்.

சோலார் சிட்டி (Solar City)

solarcity 300×77 – எலன் மஸ்க் : தோல்வி வரலாறும், மீண்டு வந்த கதையும்

சூரிய ஆற்றல் தொடர்பான சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், குறைந்த அல்லது தற்போது இருக்கும்
விலையிலேயே வீடுகளின் கூரைகளை சூரிய தகடுகளாக (Solar Panel) மாற்றுவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஹைப்பர்லூப் (Hyperloop)

hyperloop-one

இது எலன் மஸ்க் முன்மொழிந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான வடிவம் ஆகும்.

இது விமானத்தை விட அதிக வேகம் செல்லக்கூடிய திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபன் ஏஐ (Open AI)

open ai 300×109 – எலன் மஸ்க் : தோல்வி வரலாறும், மீண்டு வந்த கதையும்

ஓபன் ஏஐ(OpenAI) என்பது லாப நோக்கின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனம், இது மனித குலத்திற்கு
முழுவதும் பயன்படும் வகையிலான நட்புரீதியான செயற்கை நுண்ணறிவை முன்னெடுக்கிறது.

நியூராலின்க் (Neuralink)

neuralink

நரம்பியல் தொழில்நுட்பம் சார்ந்த இந்நிறுவனம், மனித மூளையில் செயற்கை நுண்ணறிவு பதிவது சார்ந்த ஆராய்ச்சிகளை
முன்னெடுக்க இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நினைவுத்திறனை அதிகரித்தல், கணினியை மனித மூளையுடன் இணைத்தல்
போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சாத்தியப்படக்கூடும்.

துளையிடும் நிறுவனம் (The Boring Company)

the boring company 300×135 – எலன் மஸ்க் : தோல்வி வரலாறும், மீண்டு வந்த கதையும்

The Boring Company, கடந்த டிசம்பர் 2016ல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும்போது இதை பற்றி எலன் மஸ்க் ட்விட்டர்
மூலம் அறிவித்தார். கிடைத்திருக்கும் தகவல்களின் படி, மிகப்பெரிய துளைகளின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பது
என்பது இந்நிறுவனந்த்தின் நோக்கம் ஆகும்.

#Ellen Mask #Canadian American #engineer entrepreneur inventor #TamilNews

(Ellen Mask Canadian American engineer entrepreneur inventor)

Top Stories :

Our Other websites :